இந்து மதம் மனிதநேயத்தின் மதம்; உலகிற்கு அது தேவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தர்ம ஜாக்ரன் நியாஸ் அலுவலக திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசியவர், “மோதல்கள் நிறைந்த இன்றைய உலகிற்கு இந்து மதம் தேவை… ஏனென்றால் இந்து மதம் ஒரு உலகளாவிய மதம் என கூறினார்.
இந்து மதம் ஒற்றுமையையும், அனைத்து பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்ள கற்பிக்கிறது எனக் கூறிய மோகன் பகவத், இந்து மதம் மனிதநேயத்தின் மதம்; உலகிற்கு அது தேவை என கூறினார்.
இந்து மதம் இயற்கையின் மதம், இந்து மதம் மனிதநேயத்தின் மதம் எனக் கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஒரு மதத்தின் கடமை கடவுளுக்கு மட்டும் இருக்கக் கூடாது சமூகத்திற்காகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.