Fortune நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியலில், இந்தியர்கள் பலர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் Nvidia நிறுவனத்தின் CEO Jensen Huang முதலிடத்தில் உள்ளார். இந்தியாவைச் சேர்ந்தவர்களான சத்ய நாதெல்லா 2ம் இடத்திலும், சுந்தர் பிச்சை 6ஆவது இடத்திலும், முகேஷ் அம்பானி 56ஆவது இடத்திலும் உள்ளனர்.
யூடியூப் நிறுவனத்தின் சிஇஓ நீல் மோகன் இந்த பட்டியலில் 83ஆவது இடத்தையும், கவுதம் அதானி 96ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவரும், Vertex Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓவுமான ரேஷ்மா கேவல்ரமணி, இந்த பட்டியலில் 62வது இடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
2018ம் ஆண்டு Vertex Pharmaceuticals நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்ற அவர், 2020ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.
உலகில் வர்த்தக துறையில் ஆதிக்கம் செலுத்தும் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பெண் ஆளுமை ரேஷ்மா கேவல்ரமணி ஆவார்.