சென்னை டிபி சத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். அதிமுக பிரமுகரான இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த ராஜ்குமாரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புவனேஷ், காட்சன், சாய்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அதிமுக பிரமுகர் ராஜ்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.