டெல்லியில் பிரதமர் மோடியை மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கலைஞனாகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் பிரதமர் மோடியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் முன்னெடுப்புகளுக்குப் பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின்போது கீழடி அகழாய்வு பொருட்களின் மாதிரியையும், பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் பரிசளித்துள்ளார்.