பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இரு தரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையிலும், அவர் இப்படி அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.