பட்டாசு தொழிலுக்கு சோதனை வந்தபோது மத்திய அமைச்சரை சந்தித்து பாதுகாத்தது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் நடக்கிறது என்றும், 10 ரூபாய் என்றால் செந்தில் பாலாஜி பெயர் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்றும் கூறினார்.
டாஸ்மாக்கில் 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி திமுக அரசு கொள்ளையடித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத திராணியற்ற திமுக அரசு அதிமுக-வை பற்றி குறை கூற தகுதியில்லை என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.