மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார்.
முகலாய தளபதி அஃப்சல் கானை கொல்வதற்கு சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய வாக்நாக் எனப்படும் புலிநகம் லண்டனில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த புலி நகத்தை 3 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, கடந்தாண்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு நாக்பூர் மத்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக் நாக் புலி நகத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்கள் அனைவரும் இதனை பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.