தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்.
,இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரியலூர் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் .ஐயப்பன் தன்முனைப்பாக முன்வந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இந்த வாகனத்தில், நமது கட்சியின் கொடியை ஏற்றி, நானே வாகனத்தை இயக்கி முதல் பயணத்தை துவக்கி வைத்தேன்.2026 சட்டமன்ற தேர்தலில் , நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பாஜகவின் ஒவ்வொரு காரியகர்த்தாவும், எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை ஐயப்பன் அவர்களின் இந்த செயல்பாடு வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் இந்த வாகனத்தின் முதல் பயணத்தை துவக்கி வைத்து இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வெற்றிப் பயணம் இப்போதே துவங்கியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வாகனம் உருவாக ஐயப்பன் அவர்களுக்கு வழிகாட்டிய மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு @karuppuMBJP
அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.