முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மேயர் ஆகியோர் தூய்மை பணியாளர்களின் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் என அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகை அருகில் 7-வது நாளாகப் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் மற்றும் பாலகங்கா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவை வழங்கினர்.
அப்போது பேசிய அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ், சமூக நீதி பேசும் திமுக அரசு 7- வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களைச் சந்திக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.