உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரின் வீடியோ வைரலாகி உள்ளது.
காசியாபாத்தின் மோடி நகரில் இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பைக் ஓட்டிய இளைஞர் திடீரென பைக் மீது நின்றவாறு ஸ்டண்ட் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் ஆபத்தான முறையிலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பைக் சாகசம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.