புவனகிரியில் அரசு ஊழியர் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், புவனகிரியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், திமுக கூட்டணியைச் சேர்ந்த விசிக கவுன்சிலர் ஒருவரால் ஒரு அரசு ஊழியர் தாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தலும் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் தாக்கப்பட்டால், அது நிர்வாக சீர்குலைவு மட்டுமல்ல; மக்களைப் பாதுகாக்கும் அமைப்பின் மீதான நம்பிக்கையின்மையும் ஆகும் என தெரிவித்துள்ளார்.
இது திமுகவின் அரசியல் கலாச்சாரத்தை பிரிதிபலிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.