திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர்.
உலக நலன் வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஜப்பானியர்கள் வழிபாடு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி ஜப்பானிலிருந்து வந்த முருக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பால்குடம் எடுத்து கிரிவல பாதையில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.