கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பிரதமர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.