நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
அன்பைப் பரிமாறிக் கொள்ளும் இந்த பண்டிகையையொட்டி சகோதரத்துவத்தைப் பிணைக்கும் ராக்கி கயிறை கட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்திற்குச் சென்ற பள்ளி குழந்தைகள், அவருக்கு ராக்கி கயிறு கட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு பள்ளி மாணவிகள் மற்றும் பிரம்ம குமாரி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் ராக்கி கயிறுகளைக் கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.