“ஆத்மநிர்பார் பாரத்” திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, பெங்களூரு புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்ததாகக் கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை உலகெங்கும் பறைசாற்றியதாக தெரிவித்தார்.
உள்நாட்டு தொழில்நுட்பங்களும், மேக் இன் இந்தியா திட்டமும் இதற்கு கைகொடுத்தாக அவர் பெருமிதத்துடன் கூறினார். இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்த அவர், எந்த சக்தியாலும் தடுக்க முடியாத வேகத்தில் இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதன் மூலம் இந்தியாவை இறந்த பொருளாதாரம் என விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு மறைமுகமாக பதிலடியும் கொடுத்துள்ளார்.