திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் அண்ணாநகர் தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி கூட்டம் நடைபெற்றது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்:
அப்போது, முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன் இந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இந்து எழுச்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி 38ஆம் ஆண்டுகொண்டாடப்படுகிறது தமிழக முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போன ஆண்டு சிறிய விநாயகர் சிலை 15 லட்சம் வீடுகளில் வைக்கப்பட்டது அதேபோல இந்த ஆண்டும் பல்வேறு பகுதியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5500விநாயகர்சிலைசென்னையில் வைக்கப்பட்டது.
திருப்பூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை கஸ்தூரி கலந்து கொள்கிறார்கள். முருகர் பக்தர் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதலமைச்சரை அழைப்போம்.
திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவிற்கு அனுமதி கொடுத்தால் நேரில் சென்று அழைப்பு கொடுக்கிறோம்.
அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்மாற்று மத பண்டிகைகள் தங்கள் அலுவலகத்தில் கொண்டாடுகிறார்கள். அதேபோல விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். வீட்டுக்கு ஒரு அரை அடி விநாயகர் சிலை அரசு கொடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் அனைத்துமே காகித கூழ் மற்றும் மண் சிலைகள் மட்டுமே இந்து முன்னணி சார்பாக வைக்கப்படுகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.