சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது.
கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கியபோது 4வது இன்ஜினில் தீப்பற்றியது. விமானி துரிதமாக செயல்பட்டு பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விமானம் நிறுத்தம் பகுதிக்கு இழுத்து வந்தனர்.
பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓடுபாதையில் சரக்கு விமானம் தீ விபத்துக்குள்ளானதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.