2025ம் ஆண்டில் குறிப்பிட்ட 4 ராசிகள் கோடிகளில் புரளப் போகிறதாம்… எதிர்காலங்களில் நடக்கும் சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பாபா வாங்காவின் கணிப்புதாங்க இது… அந்த அதிர்ஷ்ட காற்று வீசப்போகும் ராசிகள் எவை… பாபா வாங்கா சொன்னது என்ன? வாங்கப் பார்க்கலாம்..
இணையதளங்களை தீப்பொறி பறக்க சூடேற்றி வருவது பாபா வாங்கா கணிப்பைப் பற்றிய தேடல்கள்தான்….பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வாங்கா, சிறு வயதிலேயே விபத்தால் பார்வையை இழந்தபோதும், எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றலைப் பெற்றவராக உலகத்தால் அறியப்பட்டவர்….
உலகை உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மர்ம மரணம், சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கம், ரஷ்யா – உக்ரைன் போர், சமீபத்தில் ரஷ்யா- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலை போன்றவை, பாபா வாங்காவின் கணிப்புக்கு வலு சேர்த்தன.
பாபா வாங்கா என்றோ கணித்த கணிப்புகள், தற்போது கண்முன் நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திவருவதால், அவரது எதிர்கால கணிப்புகளைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அடுத்த ஆறு மாதங்களில் குறிப்பிட்ட 4 ராசிகள் கோடிகளில் புரளப் போகிறார்கள் என்று கணித்துள்ளார் பாபா வாங்கா.
மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகள், அவரது கணிப்பின்படி பொன்னான நேரத்தில் அடியெடுத்து வைக்கப்போகின்றன. திடீர் திருப்பங்களால் இலக்குகள் நிறைவேறப்போகிறது… நீண்டநாள் ஆசை, கனவு, நனவாகப்போகிறது… கோடீஸ்வரர்களாகும் அதிர்ஷ்டம் நிகழப்போகிறது என்கிறார் பாபா வாங்கா.
செவ்வாய் கிரகத்தை அதிபதியாகப் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு நம்ப முடியாத மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. புத்திசாலித்தனமான முதலீடுகள், வணிகம் தொடர்பான புதிய சிந்தனைகளால் புதிய கதவுகள் திறக்கப் போகிறது.
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இவ்வளவு நாட்களாகப் பொறுமையாக இருந்ததற்குப் பலன் கிடைக்கப் போகிறது. வருமான உயர்வு, தொழிலில் பெரும் இலாபம், நீண்டநாள் நிதி பாதுகாப்பு கிடைக்கப் போகிறது. விடா முயற்சியால், செல்வமும், அங்கீகாரத்தையும் பெறப்போகிறார்கள் என்கிறது கணிப்பு…
புதன் அதிபதியான மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. எவ்வளவு படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சூரியன் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிநடை போடப் போகிறார்கள். அவர்களது வாழ்க்கையே மாறப்போகிறது. நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயரப்போகிறது. பாபா வாங்காவின் கணிப்புகள் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தாலும், உண்மையான நிதி வெற்றி எப்போதும் புத்திசாலித்தனமான முடிவுகள், திட்டமிடல் மற்றும் நிலையான முயற்சியைப் பொறுத்ததே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதுதான் சாலச்சிறந்தது.