மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்க கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்றி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், வரும் 15ம் தேதி ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 18ம் தேதி வரை மழை நீடிக்க உள்ளதாக தெரிவித்ததோடு இன்று நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அறிவித்தது.