தடைகளைத் தகர்த்து உலகக் கோப்பையை வெல்வோம், என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா இதுவரை வென்றதில்லை என்றும், ஆனால் நாங்கள் வெல்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.