தெலங்கானா மாநிலம் ஜாட்செர்லாவில் பப்ஸில் குட்டி பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜாட்செர்லாவில் உள்ள பேக்கரியில் ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைகளுடன் பப்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து குழந்தைகளுடன் ஸ்ரீசைலா பப்ஸ் சாப்பிட்டபோது அதில் குட்டி பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பேக்கரியில் புகார் அளித்தபோது அங்கிருந்தவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீசைலா போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.