திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டுப் பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளைக் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூட வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு வழிபாடு நடத்தினர்.