வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் எதிரொலியாக மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சூடானில் நடைபெற்ற உள்நாட்டு போா் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நரகமாக்கியிருக்கிறது. இதனால் அண்டை நாடுகளான சாட், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு கிடைக்காததால் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகி வருகின்றனர்.