மக்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்கென்றே திமுகவில் ஒரு குரூப் உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் பங்கேற்று அவர் பேசினார்.
ஏழை மக்களுக்கு பணத்தாசை காட்டி கிட்னி திருடும் சம்பவம் திமுக ஆட்சியில் அரங்கேறி உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார்.
எனவே இந்த ஆட்சி தேவையா என கேள்வி எழுப்பிய அவர், நீதிபதிகள் நீங்கள் தான் என என தெரிவித்தார்.