டெல்லியில் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
குறிப்பாக APS காலனி, MB சாலை, சுப்ரோட்டோ பூங்கா, தௌலா குவான் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.