தேச விடுதலை மற்றும் சனாதன தர்மம் ஆகியவற்றைப் பாதுகாத்த வீரர்களில் மிகவும் முக்கியமானவர். முதன்மையானவர் கஜுலு லட்சுமிநரசு செட்டி . சென்னை மாகாணத்துக்கான மாநில மொழி கல்வி உள்ளிட்ட உரிமைகளுக்காக முதன்முதலில் போராடியதும் கஜுலு லட்சுமிநரசு செட்டி தான்.
1806-ல் சென்னையில் கோமதி செட்டியார் சமூகத்தில், வசதியான குடும்பத்தில் பிறந்து, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்று, சுயமாக ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண்டவர் கஜுலு லட்சுமிநரசு செட்டி.
கம்பீரமான தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீ வைணவ நாமம் என எளிமையான தோற்றத்துடன் விளங்கிய கஸலு லட்சுமிநரசு செட்டி, பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
1840ம் ஆண்டில், 60 இதழ்கள் இந்தியாவில் வெளிவந்தாலும், இந்தியர்களுக்கு எனச் சொந்தமாக ஒரு அச்சகம் கூட கிடையாது. அடிமை காலத்தில், எந்த ஒரு இந்தியக் குடிமகனும், தனது தாய் மொழியில் பத்திரிகையை நடத்த ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கவில்லை.
1857 விடுதலை எழுச்சிக்கு 13 ஆண்டுகள் முன்னதாகவே, சென்னையில் “இந்து” என்ற அச்சகம் தொடங்கி, அதன் மூலம் ‘மதியம்’ எனும் இதழை வெளிக்கொண்டு வந்தார் கஜுலு லட்சுமிநரசு செட்டி.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில் மாதம் மும்முறை வந்த இந்த இதழின் நோக்கம் ‘ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்துவது.’ ஆகும். “இந்தியப் பத்திரிகைத் துறையின் தந்தை” எனப் போற்றப்படவேண்டிய பெருமைக்கு உரியவர். அதற்குப் பொருத்தமானவராகவே இருப்பார்.
“மெக்காலே” கல்வி முறையைத் தாண்டி, பாரத நாட்டு மக்கள், பாரத பாரம்பரிய கல்வி” முறையைக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். தேசத்தையும் தேச தர்மத்தையும் காப்பதே தம் கடமையென வாழ்ந்த கஜுலு லட்சுமிநரசு செட்டியின் குரலே இந்தத்துவாவின் முதல் குரலாகும்.