1736 முதல் 1763 வரை நான்கு சேதுபதிகளின் ஆட்சிக் காலத்தில் சக்தி வாய்ந்த ஒரு தலைவனாக வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை விளங்கினார்.
அந்த 27 ஆண்டுக்கால சேதுநாட்டு வரலாறு, வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் வெற்றிப் புகழின் வரலாறாகவே காணப்படுகிறது.
வெள்ளையன் சேர்வை பொறுப்பேற்ற சில காலங்களிலேயே அவர் வாளுக்கு வேலை வந்துவிட்டது. 1739-ல் திண்டுக்கல்லை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றியது.
மதுரை நாயக்க மன்னர்களுக்குத் துணையாக வெள்ளையன் சேர்வை படை நடத்தி இஸ்லாமியப் படைகளைத் தோற்கடித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தெய்வத் திருமேனிகளை மானாமதுரைக்குக் கொண்டு சேர்த்தார். இஸ்லாமியர்களால் வந்த ஆபத்தை முற்றிலுமாக நீக்கிய பின்னர் மீண்டும் அவற்றை மதுரைக்குக் கொண்டுச் சேர்த்தார்.
வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை என்ற மாவீரன் இல்லையென்றால், தென் தமிழகத்தில் இஸ்லாமிய படையெடுப்பால், அனைத்து இந்துக் கோயில்களும் அழிந்து போயிருக்கும்.
சிவகங்கை சீமையின் மாமன்னர்களான மருது பாண்டியரின் தந்தையாருக்குத் தளவாய் வெள்ளையன் சேர்வை இலட்சிய வீரனாக இருந்தார்.
1752-ல் தளவாய் வெள்ளையன் சேர்வையும் சிவகங்கை ஜமீனின் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையும் தங்கள் நாட்டுப் படைகளுடன் மதுரையை ஆறு மாதங்கள் முற்றுகையிட்டு. நீண்ட போரில் மதுரையை மீட்டனர்.
108 திவ்ய தேசங்களில் 44வது ஷேத்திரமான திருப்புல்லாணி பத்மாசனி தாயார் சமேத ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான ஒரு சத்திரத்தை வெள்ளையன் சேர்வை கட்டினார்.
வெள்ளையன் சேர்வை சத்திரம் என்று அழைக்கப்படும் இங்கு பங்குனித் திருவிழாவின் 8 ஆம் திருநாளில், மண்டகபடி திருவிழா மிகச்சிறப்பாக இன்றும் நடைபெறுகிறது.