இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!
Jun 22, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1736 முதல் 1763 வரை நான்கு சேதுபதிகளின் ஆட்சிக் காலத்தில்   சக்தி வாய்ந்த ஒரு தலைவனாக வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை விளங்கினார்.

அந்த 27 ஆண்டுக்கால சேதுநாட்டு வரலாறு, வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் வெற்றிப் புகழின் வரலாறாகவே காணப்படுகிறது.

வெள்ளையன் சேர்வை பொறுப்பேற்ற சில காலங்களிலேயே அவர் வாளுக்கு வேலை வந்துவிட்டது. 1739-ல்    திண்டுக்கல்லை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றியது.

மதுரை நாயக்க மன்னர்களுக்குத் துணையாக வெள்ளையன் சேர்வை படை நடத்தி இஸ்லாமியப் படைகளைத் தோற்கடித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தெய்வத் திருமேனிகளை  மானாமதுரைக்குக் கொண்டு சேர்த்தார். இஸ்லாமியர்களால் வந்த ஆபத்தை முற்றிலுமாக நீக்கிய பின்னர் மீண்டும் அவற்றை  மதுரைக்குக் கொண்டுச் சேர்த்தார்.

வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை என்ற மாவீரன் இல்லையென்றால், தென் தமிழகத்தில் இஸ்லாமிய படையெடுப்பால், அனைத்து இந்துக் கோயில்களும் அழிந்து போயிருக்கும்.

சிவகங்கை சீமையின் மாமன்னர்களான மருது பாண்டியரின் தந்தையாருக்குத் தளவாய் வெள்ளையன் சேர்வை இலட்சிய வீரனாக இருந்தார்.

1752-ல் தளவாய் வெள்ளையன் சேர்வையும் சிவகங்கை ஜமீனின் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையும் தங்கள் நாட்டுப் படைகளுடன் மதுரையை ஆறு மாதங்கள் முற்றுகையிட்டு. நீண்ட போரில் மதுரையை மீட்டனர்.

108 திவ்ய தேசங்களில் 44வது ஷேத்திரமான திருப்புல்லாணி பத்மாசனி தாயார் சமேத ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான ஒரு சத்திரத்தை  வெள்ளையன் சேர்வை  கட்டினார்.

வெள்ளையன் சேர்வை சத்திரம் என்று அழைக்கப்படும் இங்கு  பங்குனித் திருவிழாவின் 8 ஆம் திருநாளில்,  மண்டகபடி திருவிழா மிகச்சிறப்பாக இன்றும் நடைபெறுகிறது.

Tags: 79th Independence Day.The heroic white army that stopped the Islamic invasionவெள்ளையன் சேர்வை
ShareTweetSendShare
Previous Post

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Next Post

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies