இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அலாஸ்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளதாக கூறினார். குறுகிய காலத்தில் 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும், 31 ஆண்டுகளாக சண்டையிட்டு கொண்டிருக்கும் ருவாண்டா-காங்கோ இடையேயான போரும் அதில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் 6 முதல் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறிய அவர், அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்த இருநாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்ததாகவும் மீண்டும் தெரிவித்தார்.