சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்காக டெல்லியில் வைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.