சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார்.
இதில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக சார்பில் எம்.பி. இன்பதுரை, எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், பாமக சார்பில் எம்எல்ஏக்கள் சதாசிவம், வெங்கடேசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய கீதத்துடன் தொடங்கிய தேநீர் விருந்தில் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த விருந்தில் பங்கேற்றவர்களையும், அண்ணா பல்கலைக்கழகத்தினரையும் கௌரவித்தார்.