திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகமாடி இருக்கின்றனர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் ஆளுநரிடம் மாணவி பட்டம் பெற மறுத்தது பேசு பொருளானது.
பட்டம் பெற மறுத்த மாணவி நாகர்கோவில் திமுக பிரமுகரான ராஜன் என்பவரது மனைவி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, நாகர்கோவிலை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜன் என்பவர் ஒன்றரை கோடி ரூபாய் கோயில் நிதியை சுருட்டியதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
ராஜன் மீது பல்வேறு புகார்கள் இருந்தும் திமுக பிரமுகர் என்பதால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள அண்ணாமலை
தன் மீதான புகாரை திசைதிருப்ப ஆளுநரின் பல்கலை. நிகழ்ச்சியில் ராஜன் தரப்பு நாடகமாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமூக விரோதிகளை பாதுகாத்து பதவி கொடுத்து வளர்த்து விடும் திமுகவுக்கு, விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.