திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள அம்மன் கோயில்களில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
செங்குறிச்சியில் பகவதி அம்மன், காளியம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இங்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடத் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.