ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தனது தொகுதியில் தொடங்கி வைத்த இந்துபூர் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, அரசுப் பேருந்தையும் ஓட்டினார்.
ஆந்திராவில் நேற்று முதல், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை இந்துபூர் தொகுதியில் தொடங்கி வைத்த அத்தொகுயின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான பாலகிருஷ்ணா, அரசு பேருந்தை ஓட்டி அசத்தினார்.