மயிலாடுதுறையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது எம்எல்ஏ தரப்பு மற்றும் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்யவே, எம்எல்ஏ நிவேதா முருகனின் ஆதரவாளர்கள் அவரது செல்போனை பறித்துக் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி ரத்தம் தோய்ந்த வேஷ்டியுடன் கூட்டத்திலிருந்து வெளியேறி ஓடிவந்தார். பின்னர் உடனடியாக அங்குக் காவல் துறையினர் குவிக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.