மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாநகராட்சி திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல.கணேசன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மறைந்த இல.கணேசனின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இல.கணேசனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோரும் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.