இந்தியாவுக்கு எதிரான ஆபரேஷன் ‘பனியன் -உல்- மர்சூஸ் நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூரை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தகர்த்தெறிந்தது.
என்றுமே பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான், இந்தியாவைப் பழிவாங்குவதாக நினைத்து, ஆப்ரேஷன் பன்யான்-உல்-மர்சூஸை மேற்கொண்டது.
ஆனால் இந்தியாவின் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய பாகிஸ்தான், போரை அப்படியே கைவிட்டு அடிபணிந்தது. இந்நிலையில், ஆப்ரேஷன் பன்யான-உல்-மர்சூஸில் உயிர்நீத்ததாகக் கூறி 155 பாகிஸ்தான் வீரர்களுக்கு இறந்ததற்குப் பின் வழங்கப்படும் வீர தீர விருதை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் 155 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததை அந்நாடே ஒப்புக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்தின் புகழிடம் பாகிஸ்தான் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டும் நிரூபணமாகி உள்ளது.