வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வாஜ்பாய் அனைவரையும் ஊக்கப்படுத்துவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வாஜ்பாயின் வாழ்க்கை தேசத்திற்குத் தளராத சேவையைப் பற்றியது எனவும், அவரது எண்ணங்களும், இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் அனைத்துத் துறைகளும் முன்னேற்றம் காணும் வகையில், அவர் ஆற்றிய அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் அனைவரையும் ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.