அமெரிக்காவின் சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
இந்தியாவின் 79-சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.
அந்த வகையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தில், சியாட்டிலுக்கான இந்தியத் தூதர் பிரகாஷ் குப்தா, சியாட்டில் மேயர் புரூஸ் ஹாரெல், நகரத் தலைவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, space needle கோபுர உச்சியில் இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. இதுவரை எந்த வெளிநாட்டுக் கொடியும் இங்கு ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.