நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரூர்மேடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அச்சமடைந்த பெண்கள் மற்றும் முதியோர்கள் சாலை ஓரமாக நிற்கும் நிலை ஏற்பட்டது. பரபரப்பாகக் காணப்படும் இந்த சாலையில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.