புதிய மைல் கல்லை எட்டிய NASA - ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!
Nov 16, 2025, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

Web Desk by Web Desk
Aug 18, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாசா-இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் அதன் ஆண்டனாவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள இந்த புதிய மைல் கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியாவின் தென்-கிழக்கு கடற்கரையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 30-ம் தேதி ஏவப்பட்ட நிசார் செயற்கைக்கோள்,  இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட பணியாகும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் GSLV-F16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சினால் இயங்கும் GSLV-F16, தற்போது இந்தியாவின் விண்வெளி திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1.3 பில்லியன் அமேரிக்க டாலர் செலவில் 2.8 டன்களுக்கு மேல் எடைகொண்ட NISAR, இந்திய விண்வெளி வரலாற்று கட்டமைக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறை இயக்கங்கள் மற்றும் காடுகளின் சீரழிவு ஆகியவற்றால், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அங்குல அங்குலமாகக் கண்காணிப்பதையே இந்த செயற்கைக்கோள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், பேரிடர் தயார்நிலை, உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் காலநிலை மீட்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏவப்பட்ட 17 நாட்களுக்குப் பின் ஆகஸ்ட் 15-ம் தேதி, நிசார் செயற்கைக்கோளின் 12 மீட்டர் ரேடார் ஆண்டனா ரிஃப்ளெக்டார் சுற்றுவட்டப்பாதையில் விரிவடைந்தது. தங்க முலாம் பூசப்பட்ட கம்பி வலையாலான இந்த டிரம் வடிவ ரிஃப்ளெக்டார், பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நாசாவின் பணிக்காக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாகும்.

நிசார் செயற்கைக்கோள் அதன் இட்டை ரேடார் அமைப்புகள் மூலம் நாசாவிலிருந்து L-பேண்ட் மற்றும் இஸ்ரோவிலிருந்து S-பேண்ட் ஆகியவை மூலம் நுண்ணலை துடிப்புகளைப் பூமியை நோக்கிச் செலுத்தி, தேவையான சமிக்ஞைகளை திரும்பப் பெறுவதன் மூலம், மேகங்கள், தாவரங்கள் மற்றும் மழையைக் கடந்தும் HIGH RESOLUTION IMAGING-ஐ செயல்படுத்துகிறது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் நிலம் மற்றும் பனி மேற்பரப்புகளின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மேற்பரப்பு மாற்றங்களின் 3D நேர-இடைவெளி வரைபடங்களை உருவாக்க முடியும் எனவும், இந்த தரவுகள் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற பேரழிவுகளுக்கு முன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல்வேறு முடிவுகளை மேற்கொள்வதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது நிசார் செயற்கைக்கோளின் ஆண்டனா நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நிசார் குழு ரேடார் அமைப்புகளை அளவீடு செய்து, முழு அளவிலான அறிவியல் நடவடிக்கைகளுக்குத் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அக்டோபர் 2025-க்குள் தரவுகளை வழங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: NASA - ISRO கூட்டு முயற்சிNISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்ISRONASANASA-ISRO joint effort reaches new milestone: NISAR antenna placed in orbit
ShareTweetSendShare
Previous Post

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Next Post

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies