குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் காட்டி கடந்த மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், NDA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
(பைட்)