மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணை தலைவர் தேர்தலின் NDA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை காணலாம்,
1957ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பொன்னுசாமி – ஜானகி தம்பதியருக்கு மகனாக பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தனது 16 வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் போன்ற அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
முதலில் ஜனதா கட்சியில் இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த அவர்,
1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் இருமுறை வென்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன்,
2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையடுத்து, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
ஓராண்டாக அப்பதவியில் நீடித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்தாண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக பதவியேற்றார்.
இந்த நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலின் NDA வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.