தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ஆறாயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கியதைவிட பல மடங்கு அதிகம் என தெரிவித்தார்.
77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.800 கோடி செலவில் விமான நிலையத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
2587 கி.மீ. 33467 கோடி செலவில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், ரயில்வே துறை மட்டுமல்ல,பாரா மிலிட்டரி, யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மொழிக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது பாஜக அரசு கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
நெல்லையில் வரும் 22ம் தேதி நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் எல்.முருகன் கூறினார்.