கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் வெயில் மற்றும் வெப்ப காற்று வீசியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சந்தைப்பேட்டை, அரியூர், செட்டித்தாங்கல், அத்திப்பாக்கம், அரும்பாக்கம், மணலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது .
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், ஆயந்தூர், முகையூர், மனம்பூண்டி, வீரபாண்டி, வடகரை தாழனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.