தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் திருப்பூர் ஷெரிஃப் காலனி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம் இனிப்புகளைப் பெற்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சீனிவாசன் கூறுகையில் என்டிஎ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதால் தமிழகமே பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
பாஜக வளர்ச்சிக்கு பாடுபட்டவர் 6 ஆண்டுகளாக ஆளுநராக பணியாற்றினாலும் திருப்பூர் மக்களுக்கு சேவையாற்றினார்.
தமிழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார் என்றும், தமிழர் என்ற முறையில் திமுகவினரும் அவரை ஆதரிக்க வேண்டும். என தெரிவித்தார்.