தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் துணை ஆறான மஞ்சீரா ஆற்றில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது.
ஹைதராபாத் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மஞ்சீரா ஆற்றில், நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக எடுபயல வனதுர்கா பவானி கோயிலைச் சுற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சற்று சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.