சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவானது 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழாவானது கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
முன்னதாக கோயில் கொடிமரத்திற்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.