பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேரன்மகாதேவி அடுத்த கூனியூர் கிராமத்தைச் சேர்ந்த கருமேணி அம்மாள், ஆறுமுகத்தம்மாள் ஆகிய இரட்டை சகோதரிகள், புறம்போக்கு இடத்தில் வசித்துவந்த நிலையில், பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, பட்டா வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் அதிகாரிகள் காலம் தாழ்த்தியதால் விரக்தியடைந்த சகோதரிகள், ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.