நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் அலுவல் பணிகள், எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இதனால் பல திட்டங்கள் குறித்த விவாதங்களும், பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலும் கிடப்பில் உள்ளன. இந்நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கும் நோக்கில் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயலால் ஒரு கட்டத்தில் களைப்படைந்த மாநிலங்களவை சபாநாயகர், இது பூஜ்ஜிய நேரம், அவையை தயவுசெய்து நடத்த விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.